Meta தயாரிப்புகளைப் பயன்படுத்தாத நபர்களுக்கான தகவல்கள்
இணைப்பை நகலெடு
Facebook, Messenger அல்லது Instagram இல் (“தொடர்பைப் பதிவேற்றுதல்”) கிடைக்கும் தொடர்பைப் பதிவேற்றுதல் அல்லது தொடர்பை ஒத்திசைத்தல் அம்சம் மூலமாக எங்கள் பயனர்களிடமிருந்து உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பெற்றால், Meta Platforms, Inc. (“Meta”, “நாங்கள்”, “எங்கள்” அல்லது “எங்களுடைய”) அதனைச் செயலாக்குகிறது. நீங்கள் Facebook, Messenger அல்லது Instagram இன் பயனராக இல்லாவிட்டாலும் மற்றும்/அல்லது எங்களிடம் கணக்கு வைத்திருக்காவிட்டாலும் (“பயனர் அல்லாதவர்”), நாங்கள் இந்தத் தகவல்களைச் செயலாக்குகிறோம்.
தொடர்பைப் பதிவேற்றுதல் பற்றியும் இது செயல்படும் விதமும்
ஒரு பயனர் தொடர்பைப் பதிவேற்றுதல் அம்சத்தைப் பயன்படுத்தி, தங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்திற்கான அணுகலை எங்களுக்கு வழங்கும் போது. நாங்கள் அவர்களின் முகவரிப் புத்தகத்தில் உள்ள பெயர்கள், ஃபோன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தினந்தோறும் எங்கள் சேவையகங்களில் அணுகி, பதிவேற்றுவோம். இதில் Facebook, Messenger மற்றும்/அல்லது Instagram பயனர்கள் மற்றும் பயனர்கள் அல்லாத அல்லது கணக்கு இல்லாத பிற தொடர்புகளின் (அதாவது, பயனர் அல்லாதவர்கள்) விவரங்களும் அடங்கும்.
பயனர் அல்லாதவர்கள் பற்றி என்னென்ன தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன?
ஒரு பயனரின் தொடர்புகளிலிருந்து பெயர், மொபைல் எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் முகவரியை நாங்கள் சேகரிக்கிறோம்.
பயனர் அல்லாதவரின் தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?
தொடர்பைப் பதிவேற்றுதல் என்பது Facebook, Messenger மற்றும்/அல்லது Instagramக்குத் தங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்தைப் பதிவேற்றுவதற்குப் பயனர்கள் தேர்வுசெய்யும் ஒரு விருப்பத்திற்குரிய அம்சம் ஆகும். பயனர்களுக்குச் சொந்தமான எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஏதேனும் உள்ளனவா என்பதைப் பார்க்க முகவரிப் புத்தகத்தில் உள்ள பெயர்கள், ஃபோன் எண்கள் மற்றும்/அல்லது மின்னஞ்சல் முகவரிகளைச் செயலாக்குவோம். ஒரு பயனரின் தொடர்பு Facebook, Messenger மற்றும்/அல்லது Instagram இல் இருந்தால், Facebook பயனரின் நீங்கள் அறிந்திருக்கக்கூடியவர்கள் என்பதில் நீங்கள் நட்புக்கான அழைப்பு அனுப்பக்கூடிய ஒருவராகவோ Instagram இல் பின்தொடர பரிந்துரைக்கப்படும் ஒரு கணக்காகவோ Facebook இல் உள்ள இந்தத் தொடர்பை நாங்கள் பரிந்துரைக்கலாம். Facebook, Messenger மற்றும்/அல்லது Instagram இல் இருக்கும் ஒரு பயனரின் தொடர்புக்கு, நாங்கள் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் அவர்களுக்குப் பொருத்தமான நபர்கள் மற்றும் விஷயங்களையும் பரிந்துரைக்கலாம். மெசேஜ் அல்லது மின்னஞ்சல் மூலமாக Facebook, Messenger மற்றும்/அல்லது Instagram இல் சேர, பயனர் அல்லாதவர்களையும் பயனர்கள் வரச்சொல்லலாம்.
பயனர் அல்லாத ஒருவர் Facebook பயனராக சேரும்போது, அவரை நண்பராகச் சேர்க்குமாறு நீங்கள் அறிந்திருக்கக்கூடியவர்கள் மூலமாகவோ Instagram இல் பின்தொடரப் பரிந்துரைக்கப்பட்ட கணக்காகவோ ஏற்கெனவே உள்ள பயனருக்குப் பரிந்துரைக்கவும் தொடர்பைப் பதிவேற்றுதல் அம்சம் எங்களை அனுமதிக்கிறது.
இறுதியாக, Meta தயாரிப்புகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை விசாரிப்பதற்கும், எங்கள் தளத்தைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருப்பதற்கும் பதிவேற்றப்பட்ட முகவரிப் புத்தகங்களை நாங்கள் பயன்படுத்துவோம். Meta நிறுவனத் தயாரிப்புகளின் பயனர்கள் மற்றும் நபர்களைத் துல்லியமாகக் கணக்கிட, பதிவேற்றப்பட்ட முகவரிப் புத்தகங்களைப் பயன்படுத்தி பிசினஸ் நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள், உள்கட்டமைப்பு, அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பிற Meta நிறுவனங்களுடன் Meta பகிர்ந்து கொள்கிறது. தொடர்பை இறக்குமதி செய்தல் அம்சத்தை வழங்குவதற்கும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகவும் நாங்கள் பயனர் அல்லாதவர்களின் தரவைப் பிற Meta நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
பயனர்களுக்குத் தொடர்பை இறக்குமதி செய்தல் அம்சத்தை வழங்குவதற்கும் மேலே விவரிக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும் தேவைப்படும் வரை பயனர் அல்லாதவரின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தக்கவைத்திருக்கிறோம். சில சமயங்களில், உங்கள் தொடர்புத் தகவல்களை அழிக்குமாறு நீங்கள் எங்களிடம் கேட்ட பிறகு உட்பட, அவற்றை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க வேண்டியிருக்கலாம். சட்டப்பூர்வ கோரிக்கைக்குப் பதிலளிப்பது அல்லது பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்குவது, ஒழுங்குமுறை அல்லது வழக்கு விவகாரங்கள், தீங்கு ஏற்படுவதைத் தவிர்த்தல் அல்லது பாதுகாப்பு, பத்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கங்கள் போன்ற சட்டப்பூர்வ காரணங்கள் இதில் அடங்கும். நாங்கள் அவற்றைத் தக்கவைத்திருக்க வேண்டிய கால அளவு குறிப்பிட்ட காரணத்தைப் பொறுத்ததாகும்.
பயனர் அல்லாதவர்கள் தங்கள் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் பயனர் அல்லாதவர்களுக்குத் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான திறனை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த, கீழே உள்ள தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
Facebook மற்றும் Instagram இலும், Facebook உதவி மையத்திலும் தனியுரிமை செயல்படும் விதம் குறித்து நீங்கள் மேலும் அறியலாம்.
பயனர் அல்லாதவர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்கும் விதம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களால் பதிலளிக்க முடியும் என நம்புகிறோம். சில நாடுகளில் நீங்கள் Meta Platforms, Inc. இன் தரவுப் பாதுகாப்பு அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியும், மேலும் உங்கள் அதிகார எல்லையைப் பொறுத்து, உங்கள் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு அதிகாரியையும் (“DPA”) நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் குறித்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் இங்கே கிளிக் செய்யுங்கள்.
தகவல்களை நாங்கள் பரிமாற்றும் விதம்
எங்கள் அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்களிலும் எங்கள் கூட்டாளர்கள், சேவை வழங்குநர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரிடம் இருந்தும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம். Meta ஆனது உலகளாவியது என்பதாலும், உலகம் முழுவதும் பயனர்கள், கூட்டாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டுள்ளதாலும், இந்தத் தரவு அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ள சேவைகளை நாங்கள் இயக்குவது மற்றும் வழங்குவது உட்பட பல்வேறு காரணங்களுக்காகப் பரிமாற்றங்கள் அவசியமாகின்றன.
பயனர் அல்லாதவரின் தகவல்கள் பின்வரும் இடங்களுக்குப் பரிமாற்றப்படும், அனுப்பப்படும் அல்லது சேமித்துச் செயலாக்கப்படும்:
- அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பிற நாடுகள் உட்பட எங்கள் அலுவலகங்கள் அல்லது தரவு மையங்கள் உள்ள இடங்கள்
- Meta தயாரிப்புகள் கிடைக்கக்கூடிய நாடுகள்
- இந்தத் தரவு அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, நாட்டிற்கு வெளியே நீங்கள் வசிக்கும் அத்துடன் எங்கள் கூட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் இருக்கும் பிற நாடுகள்.
சர்வதேசத் தரவுப் பரிமாற்றத்திற்குத் தகுந்த வழிமுறைகளைச் சார்ந்துள்ளோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் சேகரிக்கும் தகவல்களுக்கு:
- ஐரோப்பிய ஆணையம் மற்றும் தகுந்த பிற அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான ஒப்பந்த விதிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
- பிற நாடுகளில் போதுமான அளவு தரவுப் பாதுகாப்பு உள்ளதா என்பதைப் பற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் மற்றும் தகுந்த பிற அதிகாரிகளின் தீர்மானங்களைச் சார்ந்துள்ளோம்.
- அமெரிக்கா மற்றும் தகுந்த பிற நாடுகளுக்குத் தரவுப் பரிமாற்றத்திற்குத் தொடர்புடைய சட்டங்களின்படி ஈடான வழிமுறைளைப் பயன்படுத்துவோம்.
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
இந்த அறிவிப்பு குறித்து உங்களுக்குக் கேள்விகள் இருந்தாலோ அல்லது உங்கள் தகவல்கள் குறித்து கேள்விகள், புகார்கள் அல்லது கோரிக்கைகள் இருந்தாலோ, இந்தப் படிவத்தைப் பயன்படுத்துங்கள்.
மாற்றாக, உங்களுக்குப் படிவத்திற்கான அணுகல் இல்லையென்றால், பின்வரும் முகவரியிலும் எங்களுக்கு எழுதலாம்:
Meta Platforms, Inc.
ATTN: Privacy Operations
1601 Willow Road
Menlo Park, CA 94025
தொடர்புடைய கட்டுரைகள்
தொடர்புடைய கட்டுரைகள்
Other ways to get help
Chat with Meta AI support assistant
Resolve issues, make changes and get support in real time

